மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய மியான்மர், வங்காளதேச அகதிகள் 1,000 பேர் கைது
மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் நிலவி வரும் தொடர் வன்முறை மற்றும் வறுமை காரணமாக பலர் சட்டவிரோதமாக மலேசியா வழியாக படகு மூலம் தாய்லாந்தில் குடிபெயர்ந்து வருகிறார்கள். இவ்வாறு மியான்மரில் இருந்து ரோன்கியா என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து அகதிகளாக சென்று உள்ளனர். இந்த நிலையில் மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள லங்காவி தீவில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிக்கொண்டு 3 படகுகள் வந்தன. இதில் ஒரு படகு மட்டும் கடலில் சிக்கிக்கொண்டது. தகவல் அறிந்த மலேசிய போலீசார், படகில் இருந்த வங்காளதேசம் மற்றும் மியான்மரின் ரோன்கியா இனத்தைச் சேர்ந்த 1,018 பேரை கைது செய்தனர். இவர்களில் 555 பேர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் மட்டும் இதேபோல் 25 ஆயிரம் பேர் கடத்தல்காரர்களின் படகு மூலமாக மற்ற நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர். இது கடந்த 2014-ம் ஆண்டில் 2 மடங்குகளாக இருந்ததாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply