காணவில்லை என கூறப்பட்ட மொராக்கோ போர் விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்
ஏமனில் தாக்குதல் நடத்திய போது காணவில்லை என கூறப்பட்ட மொராக்கோ நாட்டை சேர்ந்த எப்-16 போர் விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதிபர் மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஏமனில் தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் பணியில் ஈடுபட்ட மொராக்கோ விமானம், நேற்று மாலை 6 மணியளவில் திடீரென ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
ஆனால் சவுதியை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ள வீடியோவில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கிடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் நொறுங்கி கிடக்கும் விமான அருகே கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் நிற்கும் காட்சிகளும், விமானம் அருகே மனித உடல் ஒன்று கிடக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும் விமானம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சாதா மாகாணத்தில் சுட்டு விழ்த்தப்பட்டதாக கிளர்ச்சி படை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதுவரை மொராக்கோ அரசு இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply