ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாலர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். அதேப்போல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல்குமார் அஞ்சன், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக் கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply