ஏமன் ஆயுதக்கிடங்கு மீது சவுதி விமானப்படை தாக்குதல்: குண்டுகள் வெடித்து சிதறியதில் 69 பேர் பலி
ஏமன் தலைநகரில் உள்ள ஆயுதக்கிடங்கில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் 69 பேர் பலியாகினர். ஏமனில் அதிபரின் அரசுப் படைகளை எதிர்த்து ஹவுத்தி கிளர்ச்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். போரினால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யும்படி சவுதி அரேபியாவை அமெரிக்கா கேட்டு கொண்டது. அதேபோல ஹவுத்தி கிளர்ச்சி படையினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இந்த 5 நாள் போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், சவுதி கூட்டுப்படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. சனா புறநகர்ப் பகுதியில் உள்ள ராணுவ தளம் மற்றும் ஆயுதக் கிடங்கில் இன்று விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கிருந்தவெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. வெடிகுண்டு சிதறல்கள் மற்றும் ஆயுத சிதறல்கள் சீறிப் பாய்ந்து அருகில் உள்ள குடியிருப்புகளை தாக்கின. விண்ணை முட்டும் அளவுக்கு அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
இன்று மதியம் வரை நடந்த இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 69 பேர் இறந்ததாகவும், 250 பேர் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று மீண்டும் அதே ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply