பிரதியமைச்சர் நெரஞ்சன் விக்கிரமசிங்க திடீர் மரணம்
குருநாகல் மாவ ட்ட பாராளு மன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான நெரஞ்சன் விக்கிரம சிங்க நேற்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானதாக அறிவி க்கப்பட்டுள்ளது. நெரஞ்சன் விக்கிரமசிங்க குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றவராவார். இறக்கும் போது அவருக்கு வயது 24. 1998 ஆம் ஆண்டிலிருந்து வடமேல் மமாகாண சபையில் அங்கம் வகித இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து மாகாண அமைச்சராக விளங்கினார்.
தனது தந்தையான முன்னாள் அமைச்சர் டி. பி. விக்கிரமசிங்கவின் மறைவையடுத்து மாவத்தகம தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நெரஞ்சன் விக்கிரமசிங்க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார். இவர் பிரதியமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இதற்கிடையில் இவரது மரண செய்திகேட்டு பெருமளவு ஆதரவாளர்கள் நேற்று பிற்பகல் மாவத்தகமவில் உள்ள அவரது வீட்டில் குழுமியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply