ஜெயலலிதா விடுதலை: முரண்பட்ட தீர்ப்புகளுக்கு விடை, சுப்ரீம் கோர்ட்டில் தான் காணமுடியும் – கி.வீரமணி அறிக்கை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டினை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி அவரை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். இது ஒரு விசித்திர தீர்ப்பு எனது 58 ஆண்டு கால வக்கீல் தொழில் வரலாற்றில் இப்படி ஒரு தீர்ப்பினை இதுவரை கேட்டதே இல்லை. அப்பீல்தாரர்களின் வக்கீல்களுக்கு பலநாள் வாதம் செய்ய வாய்ப்பளித்த ஐகோர்ட்டு நீதிபதி அரசு வக்கீலான எனக்கு ஒருநாள் அவகாசம்தான் தந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதுதான் இறுதி தீர்ப்பாக அமையும்’, என்று கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராகி விட்டால் தமிழகத்தில் நிலவிய செயலற்ற நிலை மாறி, ஆட்சியின் செயல்களுக்கு அவரும், அவரது ஆட்சியும் நேரடி பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்த தீர்ப்பு என்பது உடனடி பயன். கர்நாடக நீதித்துறை தந்துள்ள இந்த 2 முரண்பட்ட தீர்ப்புகளுக்கு விடை சுப்ரீம் கோர்ட்டில் தான் காணமுடியும். அதுவரை இப்போது தரப்பட்ட இத்தீர்ப்பு நியாயப்படி சரியா? தவறா? என்று விவாதிப்பதை விட மவுனம் காப்பதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply