வடகொரிய பாதுகாப்பு மந்திரிக்கு மரண தண்டனை: விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கிம் ஜாங் உன் ஆவேசம்

வடகொரிய பாதுகாப்பு மந்திரி ஹியோன் யோங்-சோல் அதிபரிடம் விசுவாசமற்று நடந்ததாக கூறி மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை கூறியுள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் ஹியோனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கொரிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அங்குள்ள காங் கோன் ராணுவ அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்வை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரில் பார்த்ததாக தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை நிறுவனத்தின் துணை இயக்குனரான ஹான் கி பியோம் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஆயுத படையின் மந்திரியாக நியமிக்கப்பட்ட ஹியோன், ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மரியாதை அளிக்கவில்லை என்றும், அதிபரின் கேள்விக்கு முறையான பதில் அளிக்கவில்லை எனவும் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply