நேபாளத்தில் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம்: ஆற்றில் விழுந்து இருக்கலாம் என சந்தேகம்

நேபாளத்தில் மாயமான அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கபட்ட பகுதியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எச்௧ஒய் ஹ்யூ ஹெலிகாப்டர் அதில் பயணம் செய்த 8 பேருடன் மாயமாகியுள்ளது.

அமெரிக்க கடற்படை கேப்டன் கிறிஸ் சிம்ஸ் தெரிவித்துள்ள தகவலின் படி ஹ்யூ என்ற அந்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை அன்று நேபாளத்தின் சாரிகோட் அருகே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க கடற்படையினர் மற்றும் 2 நேபாள ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் காத்மாண்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தோலாஹா மாவட்டத்தில் பாயும் நதி ஒன்றில் விழுந்து இருக்கலாம் என அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டரை தேடும் பணியில் 400 ராணுவ வீரர்களும், 6 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply