பாக். துப்பாக்கி சூடு: ஓட்டுனர் பலியானதால், குண்டு காயங்களுடன் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டி சென்ற நடத்துனர்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஓட்டுனர் பலியானதால், குண்டு காயங்களுடன் அசாதாரணமான தைரியத்துடன் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டி சென்றுள்ளார் நடத்துனர். முன்னதாக இன்று காலை பைக்கில் வந்த 8 தீவிரவாதிகள் கராச்சி நகர் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்களும் அடங்குவார்கள். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டின் போது அந்த பேருந்தின் ஓட்டுனரும் பலியானார். அப்பேருந்தின் நடத்துனரும் படுகாயம் அடைந்தார். எனினும் காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் பொருட்டு, குண்டு காயத்துடன் நடத்துனர் பேருந்தை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு ஓட்டி சென்ற தகவல் வெளியாகியுள்ளது. பலரும் அந்த பேருந்து நடத்துனரின் தைரியத்தையும், மனிதநேயத்தையும் பாராட்டி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply