ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் 57 பேர் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அந்த நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கப்பட்டு விட்ட இடங்களில் தப்பி இருந்த தலீபான் தீவிரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கையில் ஆப்கான் படைகள் நேற்று ஈடுபட்டன. அந்த வகையில், கூர் மாகாணத்தில் சர்சதா மாவட்டம், பத்கிஸ் மாகாணத்தில் ஜவாண்ட் மாவட்டம், பாரா மாகாணத்தில் புஷ்த் ருத் மாவட்டம், ஹெராத் மாகாணத்தில் ஷின்தான்த் மாவட்டம் ஆகிய இடங்களில் நேற்று ஆப்கான் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் மொத்தம் 57 தலீபான் தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 33 தீவிரவாதிகள் காயம் அடைந்தனர். ஏராளமான தீவிரவாதிகள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவல்களை தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது வெளியிட்டுள்ளார். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள், சாதனங்கள், 20 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை தீவிரவாதிகளிடம் இருந்து ஆப்கான் படைகள் கைப்பற்றி உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply