சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடன் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
அல்–கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன். பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்க அதிரடிப்படை ‘நேவிசீல்’ சுட்டுக் கொன்றது. அவரது உதவியாளர் காலித் அல்–பவாஷ் (52). இவர் பின்லேடனின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர். கடந்த 1998–ம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா மற்றும் தான்சானியாவில் அமெரிக்க தூதரகங்களுக்கு வெடிகுண்டு வைத்தார்.இந்த தாக்குதலில் 224 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 50–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து காலித் அல்–பவாஷ் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply