மங்கோலியப் பயணத்தில் இசைக் கலைஞராக மாறிய பிரதமர் மோடி

ஜப்பான் நாட்டில் சுற்றுப்பபயணத்தின் போது ட்ரம்ஸ் வாசித்த பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியப் பயணத்தின் போது இசைக்கலைஞராகவே மாறியுள்ளார். மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று அந்நாட்டு அதிபர் சாகியாஜின் எல்பெக்டோ மங்கோலியர்களின் பாரம்பரிய இசைக்கருவியான மோரின் குர்ரைப் பரிசளித்தார்.  பரிசைப் பெற்றுக் கொண்ட மோடி அதை எப்படி வாசிப்பது என்று கேட்டறிந்து அதை வாசிக்கவும் செய்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ட்விட்டரில் ட்வீட் செய்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ’மங்கோலியாவுடனான உறவின் புதிய இழை’ என்று இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

அரபு நாடுகளில் உள்ள ’சான்டோரி’ என்ற இசைக்கருவியைப் போல் தோற்றமளிக்கக் கூடிய, மரப்பெட்டியில் உள்ள இசை நரம்புகளை, ஸ்பூன் போன்று கையில் உள்ள குச்சியால் தட்டி இசைக்கும், மங்கோலிய இசைக்கருவியை மங்கோலியர்களின் பாரம்பரிய உடையில் மோடி இசைத்த புகைப்படம் மற்றும் வீடியோவையும் விகாஸ் ஸ்வரூப் ட்வீட் செய்தார்.

தனக்கு பரிசளித்த மங்கோலிய அதிபருக்கு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொக்கிஷமான மனு சாஸ்திர புத்தகத்தை பிரதமர் மோடி பரிசளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply