கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் மீது உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்
நீதித்துறை மற்றும் நீதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அ.தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர்கள் எஸ்.திவாகர், சி.திருமாறன், பி.வி.செல்வகுமார் ஆகியோர் கூட்டாக புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீது கர்நாடகா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை முழுவதும் படித்து பார்க்காமல், அரசியல் லாபத்துக்காக சந்தேகங்களையும், குற்றச்சாட்டுக்களையும் நீதித்துறை மற்றும் நீதிபதி மீது கருணாநிதி உள்ளிட்டோர் சுமத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த அரசியல் தலைவர்கள் நீதித்துறை மற்றும் நீதிபதியின் நீதிபரிபாலன நடவடிக்கையில் தலையிடுவதாகவும் இவர்களது பேட்டிகள், இந்த வழக்கில் இந்த நீதிபதி இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கூறுவதை போல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அந்த தலைவர்கள் மீது கிரிமினல் வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அதிமுக வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply