மஹிந்த தலைமையில் இன்று யுத்த வெற்றிநாள் நிகழ்வு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது .இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் இடம் பெறவுள்ள யுத்த வெற்றி நாள் நிகழ்வினை இராணுவ ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யில் இடம் பெறவுள்ளது. இந்த வெற்றிநாள் நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்த மே மாதம் ௧௯ ஆம் திகதியை வெற்றி தினம் என்று அனுஷ்டிக்காமல் பிரிவினை எதிரான தினமாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வைபவம் நாளையதினம் மாத்தறையில் இடம்பெறுகின்றது. இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றைய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனஇதேசிய சுதந்நிர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியியோர் இருவேறு செய்தியாளர் சந்திப்புக்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம் பெறவுளள் யுத்த வெற்றி நாள் நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பங்கேற்பு அவரது அதரவு கூட்டணியை வலுவடையச் செய்யும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
இது தொடரபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இடம் பெற்றுளள்ள யுத்த வெற்றி நிகழ்விற்கு தேசிய சுதந்திர முன்னணி பூரண ஒத்துழைப்பினை வழங்கவுள்ளது.
இதேவேளை இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளமை மஹிந்த ஆதரவு கூட்டணிக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்றார்.
யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த அனைவரும் இன்று இடம் பெறவுள்ள யுத்த வெற்றி தின நிழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொனறின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளமையால் யுத்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்த அனைத்து தரப்பினரும் இந் நிகழ்விற்கு தமது பங்களிப்பினை வளங்குவர் என எதிர் பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply