சர்வதேச தமிழ் பௌத்த மாநாடு நாளை யாழ். நகரில் ஆரம்பம்
சர்வதேச தமிழ், பெளத்த மாநாடு நாளை (20) யாழ் ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல பாகங்க ளிலிருந்தும் சுமார் 200 பெளத்தர்கள் இலங்கை வருகை தரவுள்ளனர். இவர்களுள் 65 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பெளத்தர்களாவரென இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் கலாநிதி பண்டித் மடுலுகிரியே விஜேரத்ன தெரிவித்தார். இம்மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக் களத்தில் நடபெற்றது.
“கருணா” என்னும் தொனிப்பொருளிலேயே இம்முறை சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இந்திய – இலங்கை
பெளத்த நட்புறவை உயர்த்தும் வகையில் இம்முறை முதன் முதலாக இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் வீரசிங்க கருத்தரங்கு மண்டபத்தின் பண்டிதர் அயோத்திதாசர் அரங்கத்தில் நாளை (20) காலை 9 மணிக்கு இந்நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும். மூன்று அமர்வுகளாக நடத்தப்படவுள்ள இந்த நிகழ்வின் முதல் அமர்வில் திகநிகாயம் (பகுதி1), வண. அனகாரிக தர்மபாலர், பெளத்த உயர்வுக்கு இலங்கை தமிழ் என்னும் மூன்று சிறப்பு கையேடுகள் தமிழில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சென்னை திரிப்பிடக தமிழ் மன்றத்தின் உபாசகரான இ. அன்பன் தெரிவித்தார்.
காலம் கடந்த போதும் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முயற்சியை நாம் பாராட்டுகின்றோம். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே பாரிய வித்தியாசம் இல்லை. அதேபோன்று தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த மாநாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் மதங்களுக்குமிடை யிலான உறவை மேலும் பலப்படுத்தக்கூடி யதாகவிருக்குமென இச்செய்தியாளர் மாநாட்டை தலைமை தாங்கிய பானகல உப்பதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த மாநாடு வெற்றிபெற அனைத்து இன மக்களும் நட்புரீதியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இம்மாநாட்டின் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள வண. கலாநிதி மதுரை போதிபால தேரர், பெளத்த மதம் வளர்வதற்கு இலங்கையின் கல்விமான்கள் பாரிய தொண்டாற்றியுள்ளனர். அதற்கு நன்றி செலுத்தும் முகமாகவே இம்முறை இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதாக கூறினார்.
இந்த மாநாட்டினை, இந்தியா பெங்களூரின் டிரிபல் ஜெம் அமைப்பு, சென்னை திரிபடகம் தமிழ் நிறுவனம், மதுரை தம்ம விஜய மகா விகார, ஆந்திர பிரதேசம் திரிரத்தினா அறக்கட்டளை ஆகியன இலங்கையின் மகாபோதி சங்கம் மற்றும் சர்வதோதய ஆகியவற்றுடன் இணைந்து நடத்தவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply