ஆசிய நாடுகளை சேர்ந்த 60 பேரால் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சிறுமி: முதலில் சீரழித்த 45 வயது கொடியவன்
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் சிறுமிகள் இருவரை ஆசிய நாடுகளை சேர்ந்த 60 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பர்மிங்ஷையர் அருகே உள்ள எய்ல்ஸ்பரியில் வசிக்கும் 12 வயதுடைய இரு சிறுமிகள் நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டில் இரு சிறுமிகளும் ஷாப்பிங் செய்வதற்கு வெளியே சென்றுள்ளனர். அப்போது 45 வயதுடைய விக்ரம் சிங் என்ற கொடிய மனித மிருகம் இருவரையும் சந்தித்துள்ளான். இரு சிறுமிகளில் ஒருவரிடம் தனது பெயரை பிக்கி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவன், அச்சிறுமியின் வயதையும் அவளது தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கியுள்ளான்.
பின்னர் அச்சிறுமியை மீண்டும் ஒரு நாள் தொடர்பு கொண்ட அவன், தந்திரமாக ஏமாற்றி சினிமாவுக்கு அழைத்துச்சென்றுள்ளான். இப்படி படிப்படியாக சிறுமியை தனது வலைக்குள் கொண்டு வந்த அவன், மது அருந்துவதற்கும், போதை வஸ்துகளை உட்கொள்வதற்கும் தயார் படுத்தினான். மற்றொரு சிறுமியையும் இதே வழியில் தனது தந்திர வலையில் சிக்கவைத்த அவன், அவ்வப்போது இருவருக்கும் பரிசுப்பொருட்களையும் வாங்கிக்கொடுத்தது தன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தினான்.
இரு சிறுமிகளும் அவனை முழுமையாக நம்பிய நேரத்தில், முதல் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், அவர்கள் வீட்டுக்கு சென்ற விக்ரம் சிங், முதன் முறையாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இரு சிறுமிகளை தனித்தனியாக சந்தித்து, காரிலோ அல்லது ஏதாவது ஒரு வீட்டிலோ தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வயது முதிர்வு காரணமாக வயாக்ரா மாத்திரையையும் இக்கொடியவன் பயன்படுத்தியுள்ளான்.
இதை தொடர்ந்து தனது நண்பர்களுக்கெல்லாம் இரு சிறுமிகளின் தொலைபேசி எண்களை இக்கொடியவன் கொடுத்துவிட, அவர்களும் அச்சிறுமிகளை தொடர்ந்து சீரழித்துள்ளனர். இப்படி 60 பேரால் இச்சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரு சிறுமி இரு குழந்தைகளை பெற்றெடுத்த பின் தான் இவ்விவகாரம் வெளியே தெரிந்தது. இதை தொடர்ந்து புகார் பதிவு செய்த போலீசார் 2014 ஆம் ஆண்டு விக்ரம் சிங்கை கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான். இதை தொடர்ந்து இரு சிறுமிகளை சீரழித்த 41 வயதான ஹர்மோகன் நங்பால், 33 வயதான ஆசிப் ஹுசைன், அர்ஷத் ஜானி, 38 வயதான முகமது இம்ரான், 36 வயதான அக்பரி கான், 29 வயதான தைமூர் கான், 25 வயதான ஜெரோம் ஜோ, 34 வயதான சஜத் அலி, 41 வயதான சோகைல் குவாமர், 32 வயதான பைசல் இக்பால் ஆகிய பத்து பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் 11 பேர் மீதான வழக்கு ஓல்டு பெய்லியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் குற்றவாளிகள் அனைவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply