வடக்கிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம்
கொடூரமான முறையில் கொல்லப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது. இதன்படி அனைத்துப் பாடசாலைகளிலும் முற்பகல் 11 மணி தொடக்கம் 12 மணிவரை அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துமாறு அமைச்சு கோரியுள்ளது.
இதன்போது ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை பெளிப்படுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 20 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையான நாட்களை விழிப்புணர்வு வாரமாகவும் கல்வி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மாணவர், பெண்களுக்கெதிரான வன்முறைகள், போதைப்பொருள், மதுபாவனை என்பவற்றைச் சமூகத்திலிருந்து ஒழிக்கும் விதமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply