வித்தியா கொலைவிசாரணை சி.ஐ.டி.குழு யாழ்.விரைவு

யாழ். ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புங்­குடுதீவு பிர­தே­சத்தில் உயர்­தர வகுப்பு மாணவி வித்­தியா பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. ­சம்­பவம் தொடர்பான விஷேட விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கடத்தல் மற்றும் மனிதப் படு­கொ­லைகள் தொடர்பில் விசா­ரணை செய்யும் சிறப்பு குழு­வொன்று யாழ்.புங்­குடு தீவுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸ் பேச்சாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மாணவி வித்­தியா, பலாத்­காரம் செய்­யப்­பட்­டமை, படு­கொலை செய்­யப்­பட்­டமை ஆகிய விட­யங்­க­ளுடன் சந்­தேக நபர்கள் குறித்த பின்­னணி தொடர்­பாகவும் இந்த குழு விசா­ரணை செய்யப்படவுள்ளது.

அதனை விட எவ­ரேனும் சந்­தேக நபர்­களை காப்­பாற்ற முனைந்­த­னரா, அவர்­க­ளுக்கு தெரிந்­து­கொண்டே அடைக்­கலம் கொடுத்­த­னாரா உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் உள்­ள­டங்­கி­ய­தாக பரந்­து­பட்ட வகையில் இந்த விசா­ரணை அமையும் என்றார்.

இத­னி­டையே நேற்று முன் தினம் வெள்­ள­வத்தை, ஸ்டேஷன் வீதி விடு­தி­யொன்­றுக்குள் வைத்து கைது செய்­யப்­பட்ட மாணவி வித்­தியா படு­கொலை சம்­ப­வத்தின் ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் நேற்று அதி­காலை 2.00 மணிக்கு வெள்­ள­வத்தை பொலி­ஸா­ரினால் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வந்த விஷேட பொலிஸ் குழு­விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ராஜ­சிங்கம் சசி­குமார் என்ற குறித்த சந்­தேக நபர் சுவிட்ஸ்ர்­லாந்­துக்கு தப்பிச் செல்லும் நோக்கில் வெள்­ள­வத்தை விடு­தியில் தங்­கி­யி­ருந்­துள்­ள­தாக பொலி­ஸாரின் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்ள தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந் நிலையில் ­சந்­தேக நபர் சுவி­சர்­லாந்தில் இருந்து இங்கு வந்­துள்ள நிலையில் இந்த கொலையின் பின்னர் அவர் மீண்டும் சுவி­சர்­லாந்­துக்கு தப்பிச் செல்­லவே கொழும்பு வெள்­ள­வத்­தைக்கு வந்­துள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயி­றன்று குறி­கட்­டுவான் பிர­தே­சத்தில் வைத்து குறித்த சந்­தேக நபர் கொழும்­புக்கு வர முற்­பட்ட போது பொது­மக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்­டுள்­ள­துடன் தாக்­கு­த­லுக்கும் உள்­ளா­கி­யுள்ளார். காய­ம­டைந்­தவர் சிகிச்­சை­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இதன் போது வைத்­தி­ய­சா­லையில் இருந்து சிலரின் ஒத்­து­ழைப்­புடன் ஒரு­வாறு தப்­பி­யுள்ள இந்த சந்­தேக நபர் கொழும்­புக்கு வந்து வெள்­ள­வத்­தையில் விடு­தி­யொன்றில் தங்­கி­யி­ருந்­துள்ளார். இதன் போதே வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்லர் தல­மை­மை­யி­லான பொலிஸார் அவரை கைது செய்­துள்­ளனர்.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் வெள்­ள­வத்­தையில் இருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு கொன்டு செல்­லப்­பட்­டுள்ள நிலையில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கட்­டுப்­பாட்டில் வைத்து அவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் நேற்­றைய தினம் யாழ். நீதி­மன்றில் சந்­தேக நபரை ஆஜர்­ப­டுத்­திய பொலிஸார்  விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

இந் நிலையில் யாழ்ப்­பாணம் சென்­றுள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் தொடர்­பி­லான அறிக்­கை­யினை ஆய்வு செய்த பின்னர் தமது நடவ்­டிக்­கை­களை இன்று முதல் ஆரம்­பிப்பர் என தெரிவிக்கப்படுகிறது. இந் நிலை­யி­லேயே சந்­தேக நபர்­களை பாது­காக்க முனைந்­த­வர்கள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply