சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடி தாக்குதல்களில் 170 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்திய அல்கொய்தா தீவிரவாதிகளை விட பயங்கர தீவிரவாதிகளாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கருதப்படுகிறார்கள். ஈராக்கிலும், சிரியாவிலும் முக்கிய நகரங்களை கைப்பற்றி அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகளை நிர்மூலமாக்க முடியவில்லை. இருப்பினும் அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்களை தொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், சிரியாவில் உள்ள ஹசாகே மாகாணத்தில், குர்து இன படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படை போர் விமானங்கள் களம் இறங்கின. அவை கடந்த 48 மணி நேரம் குண்டு மழை பொழிந்துள்ளன. இந்த தாக்குதல் அந்தப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. ஏறத்தாழ 170 ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 7 வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவ செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த தாக்குதல்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தந்திர பிரிவுகளையும் குறி வைத்து நடத்தப்பட்டுள்ளன. இதில் 4 பிரிவுகள் சின்னாபின்னமாயின் 7 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 3 நிலைகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. 2 கவச வாகனங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஒரு கண்டெய்னரும் அழிக்கப்பட்டுள்ளது

சிரியாவில் 48 மணி நேரத்தில் 170 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதை அங்குள்ள மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply