மைனாரிட்டிகளுக்கும் சம உரிமை- பாகிஸ்தான் முஸ்லிம் நாடு அல்ல: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் உருவான நாடு அல்ல. மைனாரிட்டிகளுக்கும் சம உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பெடரேசன் கவுன்சிலை சேர்ந்த காலித் அன்வர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை தலைமை நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 17 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது காலித் அன்வர் தரப்பு வக்கீல் வாதம் செய்தார். அப்போது, ‘‘பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா கடந்த 1947–ம் ஆண்டு ஆகஸ்டு 11–ந்தேதி அரசியலமைப்பு சட்ட முதல் கூட்டத்தில் பேசிய பேச்சை உதாரணம் காட்டி வாதிட்டார்.
முகமது அலி ஜின்னா பேசும் போது, மதத்துக்காக புதிய நாடு உருவாக்கவில்லை. இஸ்லாம் நீதி, நேர்மை, சகிப்பு தன்மை போன்றவற்றை உபதேசிக்கிறது என்றார். மேலும் ஈரானை போன்று கடவுள் ஆட்சி செய்யும் நாடாக பாகிஸ்தானை அவர் உருவாக்கவில்லை.
1973–ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பாகிஸ்தானில் ஜனநாயக உறுதியாக கடை பிடிக்கப்படும் என வலியுறுத்தியுள்ளது என்றார். அதற்கு பதில் அளித்த சுப்ரீம் கோர்ட்டு பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட நாடு அல்ல.
அனைத்து மைனாரிட்டிகளுக்கும் சம உரிமை உண்டு. அது பாகிஸ்தான் தேசிய கொடியில் உள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறங்கள் எடுத்துக்காட்டுகின்றன. முஸ்லிம்களும், மைனாரிட்டிகளும் சேர்ந்தது தான் பாகிஸ்தான் என உணர்த்துகின்றன என்று தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply