சிரியாவில் தீவிரவாதிகள் பிடியில் பழமையான நகரம்: நினைவு சின்னங்கள் அழிப்பு
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அங்கு தனி நாடு அமைத்துள்ள அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சிரியாவின் வடபகுதியில் உள்ள பல்மைரா என்ற நகரத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர்.அது பழமையான நகரமாகும். அங்குள்ள பாதுகாப்பு துறை கட்டிடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. தீவிரவாதிகள் தாங்கள் கைப்பற்றிய பகுதியில் நினைவு சின்னங்களையும், அரிய கலை பொருட்களையும் அடித்து நொறுக்கி அழித்து வருகின்றனர்.அது போன்று பல்மைரா நகரத்திலும் பல கலை பொருட்கள் மற்றும் சிலைகளை உடைத்து நொறுக்கினர். அங்குள்ள பழங்கால கட்டிடங்களுக்குள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் புகுந்தனர்.
அங்கிருந்த அனைத்து நினைவு சின்னங்களையும் அழித்தனர். எனவே, அவற்றை பாதுகாக்க சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்மைராவின் தென் மேற்கு பகுதியில் ‘யுனேஸ்கோ’ அறிவித்துள்ள உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. பழமையான கோவில்கள் இருக்கின்றன. அவற்றை அழிக்காமல் காப்பாற்றும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்மைராவில் அருங்காட்சியகம் உள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகள் முன்னேறி வந்ததை தொடர்ந்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply