சட்டவிரோதமாக இங்கிலாந்து நாட்டில் தங்கியுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சட்டவிரோதமாக இங்கிலாந்து நாட்டில் தங்கியுள்ளவர்கள் குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பையடுத்து, குடியேற்ற அதிகாரிகள் நேற்று லண்டன் நகரின் பல்வேறு தங்குமிடங்களில் சோதனை நடத்தினர். முறையான ஆவணங்கள் இன்றி லண்டன் நகரில் தங்கியிருந்த இளைஞர்கள் பலரை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனையின் போது கைது செய்தனர். சட்டவிரோதமாக இங்கிலாந்து வந்த அதிக அளவிலான இளைஞர்கள் ஈலிங் என்ற இடத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை மையமாக வைத்தே பெரும்பாலான சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply