பாரீஸ் நகரில் ஜேப்படி திருடர்கள் அச்சுறுத்தலால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஈபிள் கோபுரம் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இது பாரீஸ் நகரின் அடையாளமாக திகழ்கிறது. இதை காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு தினமும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதை பயன்படுத்தி ‘பிக்பாக்கெட்’ திருடர்கள் சுற்றுலா பயணிகளிடம் ஜேப்படி செய்து வருகின்றனர். அவர்கள் கும்பலமாக வந்து பயணிகளிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை ஜேப்படி செய்கின்றனர்.

ஒரு சில நேரங்களில் தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் ஈபிள் கோபுரத்துக்கு வெளியேயும், உள்ளேயும் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஈபிள் கோபுரத்தின் உள்ளேயும், வெளியேயும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 50–க்கும் மேற்பட்ட ஜேப்படி திருடர்கள் சுற்றித்திரிவதாக ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து ஈபிள் கோபுரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென வெளியேறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜேப்படி திருடர்களிடம் இருந்து சுற்றுலா பயணிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். அதை தொடர்ந்து ஈபிள் கோபுரம் சிறிது நேரம் மூடப்பட்டது.

இதே போன்று கடந்த 2013–ம் ஆண்டு லுயுஸ்ரே அருங்காட்சியகத்தில் ஜேப்படி திருடர்களின் தொல்லையால் ஊழியர்கள் வெளியேறி போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply