சோமாலியாவில் எம்.பி. சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்
சோமாலியாவில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்–ஷபாப் தீவிரவாத இயக்கம் அரசுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களை கொன்று குவிக்கும் இந்த அமைப்பு தீவிரவாதிகள் எம்.பி.க்களையும் குறி வைத்து கொலை செய்கின்றனர். நேற்று தலைநகர் மொகா டிசுவில் யூசுப் டிரிர் என்ற எம்.பி. தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மினி பஸ்சில் வந்த தீவிரவாதிகள் எம்.பி. யூசுப் டிரிரின் காரை வழிமறித்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.அதே நேரத்தில் மற்றொரு எம்.பி.யும், போக்குவரத்து அமைச்சக ஊழியர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அல்–ஷபாப் தீவிரவாதிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பினரால் கடந்த பிப்ரவரி மாதம் அப்துல்லாகி ஓயாத் பாரே என்ற எம்.பி. அதிபர் மாளிகை அருகே காரில் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டில் மட்டும் 5 எம்.பி.க்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply