நேபாளத்தில் ஆற்றை முடக்கிய நிலச்சரிவு: வெள்ள அபாயத்தில் இந்தியா- அதிகாரிகள் எச்சரிக்கை
நேபாளத்தில் சமீபத்திய பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில், மண்சரிவுடன் சேர்ந்து இடிந்த கட்டிடங்களும் ஆற்றின் குறுக்கே விழுந்து நீரோட்டத்தை முடக்கிவிட்டது. இதனால் இந்தியாவில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை நிலவி வருகிறது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 140 கி.மீ வடமேற்கு திசையில் உள்ள மயாக்டி மாவட்டத்தில் உள்ள ராம்சே கிராமத்தில் நேற்றிரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் இடிபாடுகள், இந்தியாவிற்குச் செல்லும் ’காளி கந்தகி’ ஆற்றின் குறுக்கே விழுந்துள்ளதால் ஆற்றில் பெருமளவிலான நீர் தேங்கியுள்ளது. எனவே இதன் காரணமாக இந்தியாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ’காளி கந்தகி’ ஆற்றை ஒட்டிய பர்பட், சியான்க்யா, பல்பா, நவல்பராசி மற்றும் சித்வான் மாவட்டங்களில் வாழும் கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி லட்சுமி பிரசாத் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply