விரைவில் பொன்சேகாவின் கட்சி உள்ளிட்ட பலர் ஐ.ம.சு.கூ.வில் :தயாசிறி ஜயசேகர

விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மேலும் சில கட்சிகள் இணையத் தயாராகவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி விரைவில் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply