ஸ்ரீ.சு.கவுக்காக என்னைப்போன்று அர்ப்பணித்தவர்கள் எவருமில்லை கட்சி பிளவுபடுவதை அனுமதிக்கமாட்டேன் – ஜனாதிபதி

என்னைப் போன்று எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புக்கள் செய்யவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (23ம் திகதி) மொனறாகலையில் தெரிவித்தார். அவ்வாறு அர்ப்பணிப்புக்கள் செய்தவர்கள் இருந்தால் எனக்குக் கூறுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மொனறாகலை மாவட்ட ஸ்ரீல.சு.க.மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மொனறாகலை நூலகக்கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஸ்ரீல.சு. கட்சியின் மொனறாகலை மாவட்ட அமைச்சர்கள்,. எம்.பி க்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீல.சு.கட்சி என்னுடைய கட்சி,அதனைப் பிரித்து பிளவுபடுத்துவதற்கு நான் எந்த சந்தர்ப்பத்திலும் செயற்பட்டதில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாகப் பதவி வகித்த பன்னிரெண்டு வருட காலப் பகுதியிலும் ஸ்ரீல.சு.க மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அக்காலப் பகுதியில் ஸ்ரீல. சு. கட்சிக்காக உழைத்ததற்காக நான் மூன்று தடவைகள் சிறை சென்று இருக்கின்றேன்.

நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது உண்மையான ஸ்ரீல. சு. க உறுப்பினராகவே அன்றி வேறு கட்சி உறுப்பினராக அல்ல ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கூட்டமைப்பாக்கியது நானல்ல. அதனைச் செய்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

இன்று நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பைப் போன்று கட்சியை வெற்றி பெறச் செய்யும் பொறுப் பும் என்னிடமே ஒப்படைக்க ப்பட்டுள்ளது. அதனால் நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் சளைக்காது உழைக்கின்றேன்.

மனிதாபிமான கட்சி என்ற வகையில் நாட்டின் எதிர்காலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய ஸ்ரீல. சு. கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

கட்சியைப் உடைத்தெறிவதற்கு மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களால் ஏமாறவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இம்மாநாட்டில் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீல. சு.கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா அமைச்சர் விஜித முனி சொய்ஸா, பிரதியமைச்சர் சுமேதா டி ஜயசேன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply