வித்யா படுகொலை – மக்கள் நிலையும் தமிழ் அரசியல் தலமைகளின் சந்தர்ப்ப வாதமும்
வித்யா என்ற புங்குடுதீவு பள்ளி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டதின் பின்னர் அவருக்கு நீதி கிடைக்கப் போராடும் மக்களின் நியாயமான நடவடிக்கைகளைக் கொச்சைப் படுத்தும் வகையில் தமிழ் தலைமகள் அரசியல் லாபம் தேட முற்படுவது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். அந்த பிஞ்சு உயிருக்காக நீதி கேட்கும் மக்கள் போராட்டத்தை, தவறான வழியில் கையாளும் ஒருசில மூடர்களும், அரசியல் லாபம் தேடும் தமிழ் தேசியவாதிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் தயவு செய்து கெடுத்து விடாதீர்கள். தேசிக்காயில் இருந்து தேங்காய் வரைக்கும் அரசியல் சாயம் பூசும் தலைவர்களே, இந்த மக்கள் போராட்டத்தை வெல்ல விடுங்கள். அதே போல் மக்களும் வன்முறைக்கு எதிரான நீதியை, வன்முறை மூலம் பெற முடியாது என்பதை உணர வேண்டும்.
சுவிஸ் பிரஜையும் அவரைத் தப்புவிக்க முயற்சி செய்தார் என்ற குற்றத்தில் சட்டத்தரணி ஒருவரையும் நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜர் படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தவறியமையே மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அது கோபமாக மாறியதன் விளைவே முறை தவறிய தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. இத்தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவையே. சட்டத்தை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பாதுகாப்புத் தரப்பு மீது மக்கள் கொண்ட அவனம்பிக்கை தான் இதன் பாரிய அடித்தளம். எங்கே இந்தக் கொடூர சம்பவத்தின் பங்காளிகள் காப்பாற்றப் பட்டுவிடுவார்களோ என்ற தவிப்புத் தான் இதன் பின்புலம். முந்தைய பல அனுபவங்களை மக்கள் நினவில் கொண்டுதான் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இந்த மக்கள் எழுச்சியானது தென்பகுதித் தலைமகளையும், பாதுகாப்புத் தரப்பினரையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுத்துள்ளது. இந்த நீதி கேட்ட போராட்டத்தின் பின்னால் ஒரு பெரிய பூதம் ஒழிந்திருக்கிறது எனவும், அதைத் தலைதூக்க விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சில தென் பகுதித் தலைவர்கள் எக்சரிக்கை செய்துள்ளனர். வவுனியாவில் நடந்த கடயடைப்புப் போரட்டத்தில், மக்கள் தெரிவிலே டயர் போட்டுக் கொளுத்தினர். அவர்ளையும் இரவோடு இரவாகக் கைது செய்ததின் நோக்கம் என்ன? சுருங்கச் சொன்னால் தமிழர்களின் நீதி கேட்கும், சுயமாகப் போராடும், அரசியலோ வேறு தலைமகளோ இன்றி சமுதாயப் போராட்டங்களை முன்னெடுக்கும் தன்மையை அடியோடு அழித்து விடவேண்டும் என்பதே நோக்கம். தெற்கிலே தினமும் எத்தைனயோ ஊர்வலங்கள், மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடப்பதை ஜனனாயகமாகப் பார்க்கும் தென் தலைவர்கள், தமிழர்கள் செய்வதை பூதம் கிளம்பும் நடவடிக்கையாய்ப் பார்ப்பது ஒன்றும் புதியது இல்லைத் தான். ஆயினும் அவர்களுக்கு நாம் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் தேசியவாதிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றம் வரையில் இந்தப் போராட்டத்தின் பின்னால் இன்னொரு பூதம் இருக்குது, அதற்கு அந்தக் கட்சி தான் காரணம், நாங்கள் நல்லவர்கள் என்றும் நல்ல முறையிலான ஊர்வலம் எல்லாம் நாங்கள், முறைதவறிய ஊர்வலம் எல்லாம் மற்றவர்கள் பொறுப்பு என்ற பாணியில் வாய் கிழியப் பேசியிருப்பது வேடிக்கையானதும், சிறுபிள்ளைத்தனமானதுமாகும். பாடசாலையில் எல்லா மாணவர்களும் ஒன்றாக விளையாடும் போது யன்னல் கண்ணாடி உடைந்து பிரச்சினை வரும் தறுவாயில் சிலர் ஒழிந்து கொள்வார்கள். சிலர் குற்றமிழைத்திருக்க மாட்டார்கள் என்று ஆசிரியர்களே முடிவெடுப்பார்கள். சிலர் அமைதியாக, ஒன்றாகத்தானே விளையாடினோம், ஒன்றாகவே வருவதை ஏற்றுக் கொள்வோம் என்றிருப்பார்கள். இரண்டு மூன்று பேர் உடனடியாக நானில்லை, நானில்லை அவர்தான் உடைத்தார், இவர்தான் உடைத்தார் என்று “நல்லபிள்ளை” ஆகி விடுவார்கள். இந்த ” மற்றவரைக் குற்றம் சொல்லி, காட்டிக்கொடுத்து, நாம் நல்லபிள்ளை பெயர் எடுக்கும்” வழ்க்கம் எமது தமிழ் மரபில் ஊறிப்போன விடயம்.
முதலாவதாக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குற்றவாளிகள் உடனடியாக 40 லட்சம் செலவில் சட்ட வல்லுனர்களை கொண்டு வந்தார்கள். சரி, நீங்கள் எந்தனை தலை சிறந்த, நாட்டிலே பிரசித்தி பெற்ற சட்டமேதைகளை அந்த பிஞ்சு உயிரின் நீதிக்காக கொண்டுவந்தீர்கள்? அல்லது அதற்கான முயற்சி எடுத்தீர்களா? எதாவது பண உதவிக்கு நிதி சேகரித்தீர்களா? தவறு நடந்தவுடன் மற்றவர் மேல் பழிபோட இருந்த வேகத்தை, ஆக்கபூர்வமான செயலுக்கு காட்டினீர்களா?
தமிழ் அரசியல் தலைமைகளே…! சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் போரட்டம் நடத்தியவர்களை வன்மையாக கண்டியுங்கள். அதில் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோருங்கள். அதில் நிரபராதிகளை விடுவிக்கவும் கோர வேண்டுமல்லவா? நீங்கள் ஏன் சாயம் பூசி, குற்றம் சுமத்தி, போர்க்குணத்தை அடக்க முற்படுகிறீர்கள்? காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது என்றால், அந்தக் காகத்தை அந்தக் கட்சி தான் அனுப்பினார்கள், இந்தக்க கட்சிதான் அனுப்பினார்கள் என்று குறை கூற முற்படுகிறீர்கள்? காகம் செய்தது தவறு என்றால் அது தறுதான். அதற்கு தண்டனை பெற்றுக் கொடுங்கள். சந்தோஷம். ஏன் கட்சி சாயம் பூசி அரசியல் செய்கிறீர்கள்?
இதேபோல் தான் முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது உலகத்தமிழர்கள் வெகுண்டு எழுந்து தமது உறவுகளுக்காக உலகமே அதிசயிக்கும் வகையில் போராட்டம் நடத்தினார்கள். பல சர்வதேச நாடுகள் விரும்பியும் உதவ முடியாமல் போனது ஏன்? அரசியல் சாயம் பூசியும், சில பதாதைகளையும், படங்களையும் ஏந்தி சிலர் சிந்திக்காமல் செயல் பட்டதால் தான் பலபேர் முற்சி பலனளிக்காமல் போனது? இதை மக்கள் புரிந்து கொண்டு செயல்படுவது தற்போதைய காலத்தின் கட்டாயம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply