தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஒடுக்க வேண்டும் என்ற கருத்தை மனோகர் பாரிக்கர் திரும்ப பெற வேண்டும்: ப.சிதம்பரம்

தீவிரவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அண்மையில் சென்ற மனோகர் பாரிக்கர், அங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், முள்ளை முள்ளால் எடுப்பது போல தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஒடுக்க வேண்டும்” என தெரிவித்தார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் கூறிய கருத்தின் பயங்கரம் மற்றும் அதன் தீவிர தன்மையை புரிந்துக்கொண்டு அதனை உடனே  பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் திரும்ப பெற வேண்டும் என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் அவர் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஒடுக்க வேண்டும் என்ற கொள்கையை இந்தியா பயன்படுத்தியது இல்லை. தற்போதைய மத்திய அரசும் அப்படி ஏதுவும் செய்ய கூடாது என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply