பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: தேவாலயம் தீ வைத்து எரிப்பு
பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியான சாண்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஹுமாயூன் பைசல் மாசியா. கிறிஸ்தவரான இவர் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக தெரிகிறது. இதனால் மத அவமதிப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து ரலிரோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். இதை அறிந்த ஒரு கும்பல் போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்று கையிட்டனர்.குற்றவாளி ஹுமாயூன் பைசல் மாசியாவை தங்களிடம் ஒப்படைக்கும் படி வலியுறுத்தினர். அதற்கு மறுத்த போலீசார் அக்கும்பலை விரட்டியடித்தனர். உடனே அந்த கும்பல் சாண்டா பகுதியில் உள்ள ஹுமாயூன் வீட்டுக்கு வந்தனர்.அவரது வீட்டை இடித்து நொறுக்கி சூறையாடினர்.
மேலும் அப்பகுதியில் இருந்த ஏராளமான கிறிஸ்தவர்களின் வீடுகளும் நொறுக்கப்பட்டன கிறிஸ்தவர்களும் தாக்கப்பட்டனர்.பல வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தேவாலயத்துக்கு தீ வைத்தனர். பொருட்கள், பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் உயிருக்கு பயந்த கிறிஸ்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஒட்டம் பிடித்தனர்.இதற்கிடையே கலவரம் நடந்த பகுதிக்கு போலீசார் தாமதமாக வந்தததால் தான் இச்சம்பவம் நடந்ததாக கிறிஸ்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply