ஏமனில் முன்னாள் அதிபருடைய மகன் வீட்டை குறி வைத்து தாக்குதல்
ஏமனில் முன்னாள் அதிபருடைய மகன் வீட்டை குறி வைத்து சவுதி கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப் படையினருக்கும் கடும் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் சவுதி கூட்டுப் படை, ஏமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் மகனான அகமது அலியின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தாக்குதல் நடந்த நேரத்தில், முன்னாள் அதிபரின் மகன் வீட்டில் இல்லை என தகவல் தெரியவந்துள்ளது. இதுவரை நடந்த இருதரப்பினருக்குமான போரில், 1800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply