விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் ‘கிஷான் சேனல்’ என்னும் விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனலை தொடங்கி வைத்தார்.
விழாவில் மோடி பேசியதாவது:-
நாடு முன்னோக்கி செல்லவேண்டும் என்றால் ஒரு கிராமத்தை முன்னெடுத்து செல்வது அவசியம். கிராமம் முன்னோக்கி செல்லவேண்டும் என்றால் ஒரு விவசாயியை பலப்படுத்தவேண்டும்.
எனவே, விவசாயிகளை ஊக்கப்படுத்த அவர்களுக்கென தனியாக ஒரு தொலைக்காட்சி சேனல் இருப்பது அவசியம்.
யாராவது ஒருவர் விளையாட்டு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், அவரால் அதை தொலைக்காட்சி வாயிலாக எளிதில் தெரிந்துகொள்ள இயலும். ஏனென்றால் இந்த துறையில் ஏராளமான சேனல்கள் இருக்கின்றன.
நாட்டில் நிறைய தொலைக்காட்சி சேனல்கள் இருக்கும்போது இன்னும் சேனல்கள் தேவையா? என்று பலர் நினைக்கலாம்.
நாட்டிலுள்ள கிராமங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு அரசாங்கத்தில் விவசாயத்துக்கென ஒரு அமைச்சகம் இருப்பதோ அல்லது மந்திரி இருப்பதோ தெரியாது.
யாராவது ஒரு விவசாயியின் வீட்டில் அவருக்கு 3 மகன்கள் இருந்தால் அதில் புத்திசாலியான மகன் தகுந்த வேலையை தேடுகிறார். இன்னொருவர் ஏதோ ஒரு வேலையை தேடுகிறார். எதையும் புரிந்து கொள்ள முடியாத நபர் விவசாயி ஆகிவிடுகிறார். இது வருத்தம் தரும் விஷயம்.
விவசாயம் செய்வதுதான் சிறந்தது. இது ஈடுபடக்கூடாத துறை என்ற தாழ்வு மனப்பான்மை நம்மிடையே மாறவேண்டும். ஒரு காலத்தில் விவசாயத்துக்கு நல்ல மதிப்பு இருந்தது. அதை நாம் மீட்கவேண்டும்.
இந்த சேனல் மூலம் விவசாயம் குறித்தும், விவசாயிகளுக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கவேண்டும். விவசாயத்தில் கொண்டு வரப்படும் மாற்றம் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இயலும்.
எனக்குத் தெரிந்து ஏராளமான விவசாயிகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கின்றனர். இதுபோன்ற தகவல்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply