ஆட்சியை கையளிக்குமாறு ஐ.ம.சு.மு கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.கவுக்கு ஆட்சியில் இருக்க முடியாது
பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிறுபான்மை பலமுள்ள ஐ.தே.க.வுக்கு ஆட்சியில் இருக்க அருகதை இல்லை. எனவே, தமது கட்சிக்கு ஆட்சி பொறுப்பை வழங்குமாறு கோர ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகள் எடுத்த தீர்மானத்தின் படி நேரில் அதனை ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு செய்யப் பட்டதாகவும் ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,
அடுத்த தேர்தலில் ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது குறித்தும் ஐ.ம.சு.மு.வுக்கு ஆட்சியை மீளப்பெறுவது குறித்தும் ஜனாதிபதியு டனும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சு நடத்த கடந்த வாரம் நடந்த ஐ.ம.சு.மு. கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. அதன்படி நேற்று ( 27) இன்றும் இந்த சந்திப்புகள் இடம் பெறுகின்றன.
செப்டம்பர் மாதத்தில் ஐ.தே.க. மீண்டும் எதிர்க்கட்சியாக மாறும் எமது உறுப்பினர்களை சிறையிலடைத்து மக்களின் ஆணையை மாற்ற முடியாது. அடுத்த தேர்தலின் பின்னர் மக்கள் நல அரசாங்கமொன்றை உருவாக்க இருக்கிறோம்.
தமது கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பது தெரிந்தே ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கம் குறித்து பேசிவருகிறார். கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கப்போவதில்லை.
14 கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதி யையும் சந்திக்கிறார்கள் என்றார்.
மஹிந்த யாப்பா
மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியதாவது, எமக்கு தற்பொழுது 138 எம்.பி.களின் ஆதரவு இருக்கிறது. அதனால் எமக்கு ஆட்சியமைக்க முடியும். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துள்ளது. பிரதமரை துரத்துவதற்காக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் 113 பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பதே எமது நோக்கமாகும்.
அரசாங்கத்தின் 100 நாள் முடிந்து விட்டது. 100 நாளில் பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை. பருப்பு, அரிசி, தேங்காய் விலைகள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் அரசாங்கம் பின்னடைந்து வருகிறது என்றார். இதனை தடுக்கவோ பாராளுமன்றத்தை கலைக்கவோ அரசாங்கம் முயலலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply