மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம் புதியவர்கள் நியமனம் விரைவில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதுவர்களில் இந்தியா விற்கான இலங்கை உயர் ஸ்தானிகரைத் தவிர்ந்த ஏனையோர் ஜூன் மாதம் இறுதியளவில் பதவியிலிருந்து நீக்கப் படுவரென வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மஹீஷினி கொலன்னே தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தினால் இந்தியாவிற்கான புது உயர் ஸ்தானிகரொருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளபோதும் பதவியேற்கும் வரையில் இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருப்பா ரென்றும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சின் உத்தியோக பூர்வ பேச்சாளராக புதிதாக நியமிக்கப் பட்டுள்ள மஹீஷினி கொலன்ன நேற்று தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய போதே மேற்கண்டவாறு கூறினார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங் களிலுள்ள 40 தலைமைத்துவப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 33 பேரின் பெயர்கள் அரசாங்கத்தினால் உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவிற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

இவர்களுள் 17 பேர் இலங்கை வெளிவிவகார சேவையை சேர்ந்தவர்க ளெனவும் எஞ்சியோர் தகுதியடிப் படையில் அரசாங் கத்தினால் செய் யப்பட்ட சிபாரிசுகளெனவும் அவர் தெரிவித்தார்.

இருந்த போதிலும் சர்வதேச வியன்னா ஒப்பந்தம் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் உயர்ஸ்தானிகர் அல்லது தூதுவர் பதவிக்கு நியமிக் கப்படும் ஒருவரை குறித்த நாட்டின் அரசாங்கம் ஏற்று, அனுமதியளிக்கும் வரை குறித்த நபர்களின் பெயர்களை பிரகடனப்படுத்த முடியாது.

இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டவர் களென்ற வகையில் வெளிநாடுக ளிலிருந்து அனுமதி கிடைக்கும் வரையில் வெளிவிவகார அமைச்சு புதிய உயர்ஸ் தானிகர் மற்றும் தூதுவர்களின் பெயர்களை வெளியிடமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் 63 இலங்கை தூதரகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply