இலங்கை அமைச்சரின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க முடியாது என்ற இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர் பிரச்னையை தீர்க்க சர்வதேச கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் பரிந்துரையை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. 65 நாட்களுக்கு அல்ல, 65 மணி நேரத்துக்கு கூட அனுமதிக்க முடியாது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த சமரவீரா கருத்து தெரிவித்திருந்தார் .

அவரின் இந்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.  இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே நீடித்து வரும் பிரச்னையை தீர்க்கும் நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த சமரவீராவின் கருத்து ஏற்புடையது அல்ல என  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் சொரூப் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply