ஈரானுக்கு எஸ்.300 ரக ஏவுகணைகள் விற்பனை: ரஷியா

ஈரானுக்கு வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் எஸ்௩00 ரக ஏவுகணைகள் விற்பனை செய்யப்படுவதை ரஷியா உறுதி செய்துள்ளது. எனினும், அந்த ஏவுகணைகளும், அதனை இயக்குவதற்கான தொழில்நுட்பக் கருவிகளும் ஈரானுக்கு அனுப்புவதற்கான தேதியை ரஷியா இன்னும் அறிவிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் யெவ்கெனி லுக்கியநாவ், ஈரானுக்கு எஸ்௩00 ஏவுகணைகளை விற்கும் முடிவு உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தார். எனினும், இந்த விற்பனையின் அனைத்து செயல்முறைகளையும் நிறைவு செய்து, ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்புவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

அதற்கான தேதியை இப்போது உறுதியாக கூற முடியாது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரானுக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply