சிங்கப்பூரில் ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்த திட்டம்
சிங்கப்பூரில் ஐஎஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தாக்க திட்டமிட்டு, முக்கிய இடங்களை தேர்வு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சில சிங்கப்பூர் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சிங்கப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply