சிரியாவில் மீண்டும் பீப்பாய் குண்டுவீச்சு: அப்பாவி பொதுமக்களில் 71 பேர் பலி
ஆயில் பீப்பாய்கள், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் வெடிப்பொருட்களுடன் பழையை இரும்புத் துகள்களை சேர்த்து ’பேரல் பாம்ப்’ எனப்படும் பீப்பாய் குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகையிலான குண்டுகளை போர்க்களங்களில் பயன்படுத்த சர்வதேச மனித உரிமை ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளன.
ஆனால், இந்த தடையை மீறி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பீப்பாய் குண்டுகளையும், கொடிய ரசாயன ஆயுதங்களையும் சிரியா அரசு பயன்படுத்தி வருவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சிரியாவில் இட்லிப் நகரை கைப்பற்றியுள்ள போராளிகளை ஒடுக்கும் முயற்சியாக இன்று அந்நாட்டின் விமானப்படை பீப்பாய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பொதுமக்களில் 71 பேர் பலியாகியுள்ளதாகவும் அங்குள்ள ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அல்ஷார் பகுதியில் இன்று நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும், அல்பாப் பகுதியில் உள்ள அல்ஹைல் வாரச்சந்தை பகுதியில் நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply