அவசர ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து தவறாக பேசிய சிறுவன் மன்னிப்பு கேட்டு கடிதம்
அமெரிக்காவின் அவசரகால ஹெல்ப்லைன் எண்ணான 911-க்கு போன் செய்து தவறாக பேசிய, 6-வது கிரேட் படிக்கும் 12 வயது சிறுவன் தன்னை மன்னித்து விடுமாறு ஹெல்ப்லைன் மைய ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளான். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள சவன்னா நகரில் வசித்து வரும் அந்த சிறுவன் 911-க்கு போன் செய்து Deez nuts என்று கூறிவிட்டு உடனே அழைப்பைத் துண்டித்துள்ளான். இது போன்ற அழைப்புகள் வருவது வாடிக்கை என்பதால், ஊழியர்கள் யாரும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் தனது செயல் தவறானது என்பதைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன்
”நான் செய்தது முட்டாள்தனமான காரியம் என்று எனக்கு புரிகிறது. நான் செய்தது தவறுதான்., நான் கூறிய மோசமான வார்த்தைக்காக என்னை மன்னியுங்கள்” என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளான்.
அவனுக்கு மன்னிப்பு வழங்கிய ஹெல்ப்லைன் ஊழியர்கள் இனி இதுபோன்ற காரியங்களை செய்யக் கூடாதென்று அச்சிறுவனுக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply