மன்மோகன் சிங்கிடம் மோடி பாடம் கற்க வேண்டும்: காங்கிரஸ்
60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ள பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) என்கிற செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், சூட் பூட் அணிந்த பெரு முதலாளிகளுக்கான அரசாக தமது அரசு விளங்குவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்வதற்கு பதில் அளித்துள்ளார்.
சூட்கேஸ் அரசாக அதாவது ஊழல் அரசாக இருப்பதைவிட சூட்பூட் அரசாக இருப்பது மேல் என பதிலடிகொடுத்துள்ள பிரதமர் 60 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு திடீரென ஏழைகள் மீது அக்கறை வந்திருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டோம் வடாக்கன், 60 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மோடி பாடம் பயில செல்ல வேண்டும் என்றார்.
இதற்கு பதிலடிகொடுத்துள்ள பாஜக எம்.பியும் செய்தி தொடர்பாளருமான மீனாட்சி லெஹி, இந்தியாவின் ஏழ்மையை விற்பனை செய்த காங்கிரஸ்காரர்கள்தான் உண்மையான சூட்பூட் வாலாக்களாக வலம் வந்ததாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply