முதல் முறையாக மொரீசியஸ் நாட்டில் பெண் ஜனாதிபதி
இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவு நாடு மொரீசியஸ், பணக்கார நாடான இங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு கரும்பு அதிகம் விளைவதால் சர்க்கரை ஆலைகள் அதிகம். அதனால் இங்கிருந்து சர்க்கரை அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. மொரீசியஸின் ஜனாதிபதி ஆக கைலாஷ் புர்யாக் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக அமீனா குரிப்–பாகிம் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இவர் மொரீசியஸின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை பெறுகிறார்.
இவர் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான விஞ்ஞானி ஆவார். கைலாஷ் புர்யாக் ராஜினாமா ஏற்கப்பட்டவுடன் இவரை புதிய ஜனாதிபதியாக பிரதமர் சர் அனிருத் ஜெகனாத் அறிவித்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமராக பதவி ஏற்றார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அமீனா குரிப்–பாகிமை ஜனாதிபதி ஆக்குவதாக அவர் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான ஓட்டெடுப்பு நாளை (திங்கட்கிழமை) பாராளுமன்றத்தில் நடக்கிறது. அதில் வெற்றி பெற்றவுடன் ஜனாதிபதி ஆக பதவி ஏற்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply