“மகிந்தவினர் மீண்டும் வேண்டாம்” அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அனுராதபுரம் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. “மகிந்தவினர் மீண்டும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை, நாம் பிரஜைகள் மற்றும் வீதியின் எதிர்ப்பு ஆகிய சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தன.
முன்னாள் ஜனாதிபதி விகாரை மற்றும் கோயில்களுக்கு சென்று மக்களை ஏமாற்றி, மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மத தளங்களை அரசியல் தலைமையகமாக பயன்படுத்துவதாகவும். குறித்த செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply