20 ஆவது திருத்தம் ஐ.தே.க நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்
இருபதாவது அரசமைப்பு திருத்தத்தை யதார்த்தமாக்க ஸ்ரீல.சு.கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முன்கொண்டு செல்லும் தேசிய வேலைத் திட்டத்தில் இணையுமாறு நாட்டு மக்களையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும், சகல அரசியல்வாதிக ளையும் அழைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இருபதாவது அரசமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது பொறுப்பும், சிறந்த பண்புமாகும்.
இதனால் அவரினதும் ஐ. தே. கட்சியினதும் நிலைப்பாடு என்ன? என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்காக தெளிவாக பகிரங்க அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வெளியிடுமாறு தாம் சவால் விடுவதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐ. தே. க. மக்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் வழங்கிய வாக்குறுதியை மீறி 20ஆவது அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாமல் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கேட்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வர்.
குறுகிய அரசியல் இலக்கைக் கருத்திற் கொள்ளாமல் மக்களின் அபிலாஷைகளை மிதிப்பதற்கு செயற்படும் ஐ. தே. க.வுக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க மக்கள் முன்வந்துள்ளனர்.
சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் 73ஆவது ஜனனதின பாராட்டுபசார விழாவிலும் அவரும், சிவில் சமூகமும் 20ஆவது அரசமைப்பு திருத்தத்தை தாமதமின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கைகளை மறக்கடிக்க முடியாது. காலால் உதைத்துவிட முடியாது. ஜனநாயகத்துக்கு விரோதமாக ஐ.தே.க. செயற்படாது என்றும் நாம் நம்புகிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply