வெளிநாட்டு பயணங்களின்போது பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகளின் மதிப்பு ரூ.3 லட்சம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களின் போது கிடைத்த பரிசுகள் பற்றி தகவல் தெரிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 மாதங்களில் வெளிநாட்டு பயணங்களின்போது ரூ.3 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 65 பரிசுகளை பெற்றுள்ளார். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட ‘கோட்’ பொத்தான்கள், டீ கோப்பைகள், புத்தகங்கள், புத்தர் சிலை, கோவில் வடிவங்கள், ஓவியங்கள், கம்பளங்கள், புகைப்படங்கள், நகைகள் ஆகியவை அடங்கும்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.83 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளார். இதில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள வாள் உள்பட ரூ.49 லட்சம் மதிப்புள்ள நகைகள், மேஜை கெடிகாரம், பேனா, பிரார்த்தனை விரிப்பு, பசுபதிநாதர் சிலை, தங்கத்தால் செய்யப்பட்ட பெட்டி போன்றவை அடங்கும்.
இதுதவிர ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களின்போது பெற்ற பரிசுகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகள் பெற்றுள்ளார். இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பிரேஸ்லெட், சால்வைகள், கம்பளம், பர்ஸ், டீ கோப்பைகள், வெள்ளி புகைப்பட பிரேம் ஆகியவை அடங்கும்.
வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளார். இதில் அதிகமான சேலைகளும், உலோக சிலைகளும் அடங்கும்.
இந்த தகவல்கள் அமைச்சரவையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply