இடம்பெயர்ந்தோர் சுகாதார நலன் கருதி ஜேர்மன் செஞ்சிலுவை சங்கம் 6 கொள்கலன்கள் அன்பளிப்பு
இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை களை வழங்கும் வகையில் சுகாதார அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் ஆறு நடமாடும் கொள்கலன்களை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமார் 5.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்கலன்களைக்கையளிக்கும் வைபவம் இன்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜகத் அபேசிங்க, தேசிய செயலாளர் எஸ். எச். நிமல் குமார், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அன்றெஸ் லிண்டனர், மொங்கோலிய நாட்டின் பிரதி சுகாதார அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ் வில் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் உரையாற்றுகையில், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் போதிய வைத்தியர்கள், தாதியர்கள் அப்பிரதேசங்களில் தங்கியிருந்து மக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது. மஹிந்த சிந்தனையை உண்மைப்படுத்தும் வகையில் சுகாதார சேவைகளை சுகாதார அமைச்சு சிறப்பாக செய்து வருகின்றது.
ஏனைய மக்களைப் போன்று இடம் பெயர்ந்த மக்களும் தேவையான சுகாதார தேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு நிறு வனங்களின் உதவி தேவைப்படுகின்றது. எமது அமைச்சு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.
இதற்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நட மாடும் கொள்கலன்கள் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரதேசங்களுக்கு விரைவாக அனுப்பி வைத்து அம்மக்களின் சுகாதார சேவைகளை தீர்க்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply