புலிகளின் கதை முடிந்து விட்டது சிறிய ஆயுதங்களால் மட்டுமே அவர்களால் தாக்க முடியும்: அமைச்சர் கருணா அம்மான்
நான் தேசிய அரசியலில் ஈடுபடுவதனையே விரும்புகிறேன். மாகாண சபை ஒன்றின் முதலமைச்சராவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதே போன்று சிறியதொரு கட்சியை வழி நடத்தவும் விரும்பவில்லை. இவ்வாறு தெரிவிக்கிறார் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன். (கருணா அம்மா)
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது அமைச்சுப் பொறுப்பினை நான் திறம்படச் செயற்படுத்துவேன். எந்தப் பிரச்சினையையும் முகங்கொள்ளத் தயாராகவிருக்கிறேன். அதேபோன்று அதற்கான தீர்வினையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த போது எதற்கும் முகங்கொடுக்கக் கூடிய சக்தியை நான் பெற்றுக்கொண்டேன்.
நான் பிரிட்டனில் எட்டு மாதங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தேன.; அப்போது பல ஆங்கிலப் புத்தகங்களைப் படித்து எனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன். தற்போது நான் சிங்கள மொழியைக் கற்று வருகிறேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்களால் இனி ஒருபோதும் எழுந்திருக்க முடியாது. அவர்கள் முடிந்துவிட்டார்கள். சிறிய ஆயுதங்களைக் கொண்டு மட்டும்தான் அவர்களால் தாக்குதல்களை நடத்த முடியும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடொன்றைப் பெறலாமென்பது நடக்க முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply