ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவொன்று இலங்கை வரவுள்ளனர்
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவொன்று வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தொடர்பு ஆணையாளர் பெனிட்டா பெரரர் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.
யுத்த பிரதேசங்களில் 170,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர். யுத்த நிறுத்தம் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பினை இலங்கை அரசாங்கமோ , விடுதலை புலிகளோ இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கே மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பும் யுத்த நிறுத்தம் செய்து,யுத்த பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply