வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: போலந்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் இருந்து போலந்தில் உள்ள வார்சா நகருக்கு ரியானெர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 168 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். வார்சா அருகே விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மோட்லின் விமான நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளான்.

இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர் மோட்லின் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானி உடனே விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் விமானத்தை முழுமையாகச் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியான வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. எனவே, இது வெறும் புரளி என தெரிந்தது. சோதனையின்போது பாதுகாப்பு கருதி விமான நிலையமும் சிறிது நேரம் மூடப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply