முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியும் அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நேற்றிரவு சந்தித்து பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை சபாநாயகர் சமல் ராஜபக் ஷவின் இல்லத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்றுக் காலை அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்தித்துப் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக் கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்த முடியாது என்றும் தேசியப் பட்டியலும் அவருக்கு வழங்க முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதேவேளை இந்தச் சந்திப்பையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம்வகிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் நேற்றிரவு சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பில் உள்ள மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் 60 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply