நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 15ம் தேதி நடிகர் சங்க தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி விஷால் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனிடையே நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவிருந்த நிலையில், தேர்தலுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருவாரங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோருககு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply